Posts

Showing posts from July, 2025

14.உலா வருவோம்

 66. நீல வானில்        நீந்திக்கொண்டிருக்கின்றன        தேங்காய் துருவலாக       வெண்பறவைகள். 67. விதை இல்லா திராட்சை       ப்ராய்லர்சிக்கன்       மரபணு விதைகள்       புழு இல்லா கத்திரி       போய்கொண்டுதான் இருக்கிறோம்       இவைகளுடன்        மதிகெட்டவராய். 68. இரு கைகளைக் கூப்பி       இறைவனை       இன்னமும் வேண்டி       இறைஞ்சினான்      இல்லை  என்பவனுக்கு      இல்லை என்று சொன்ன      இருப்பவன். 69.சட்டமென்பது வெளிக்காவல்      தர்மமென்பது மனக்காவல்      இரண்டும் போன பின்      எது காவல்? யார் காவல்? 70, அரங்கினுள் நுழைகிறேன்        இருக்கைகள் நிரம்பி வழிகின்றன        யாரேனும் எழமாட்டார்களா?       தேடுகின்றன      பல நூறு கண்கள்   ...