Posts

87. உலா வருவோம்

 431, விண்ணில்            பூசணிக்கீற்றாய்             மூன்றாம் பிறை            கிழித்துப்போட்ட            காகித குவியலாக           நட்சத்திரங்கள். 432, பென்சிலை           சீவிக் கொண்டிருக்கிறேன்            சீவல் போல            மரத்துகள்கள்           கீழ் விரித்திருந்த            வெள்ளைத்தாளில்.           தாள் சொன்னது  அவற்றிடம்            நான் உங்கள் சகோதரனே என்று.  433. வானில் மழை மேகம்          கதிரவனைக் காணோம்          அவனை மட்டுமா...என்           நிழலினையும் காணோம்.. 434.மனம் புரவியாய் ஓட         கைகள் நத்தையாய் ஊர  ...

86. உலா வருவோம்

 426. எதிர்பார்ப்புகள்           ஏமாற்றம் தரும்           என அறிந்தும்           எதிர்பார்த்து           ஏமாறுவதே           என் வழக்கமாய் போனது. 427. கரையொர்ம் அமர்ந்து          கதலியின் கண்களை          கயல்விழி என்றிட்டான்          மீன் காதலன்          தன் காதலியை          சந்தேகப்பட்டான். 428. வானம் வெளுத்தபின்னும்           விண்ணில் மறையா           வானவில்லாய்           வாழ்வின் நினைவலைகள், 429. பழுத்து           விழும் நிலையில் உள்ள           இலையை           கொஞ்சிக் கொண்டிருக்கிறது           வருத்தத்த...

85 உலா வருவோம்

 421.கடல் நீரை குடி நீராக்கி          மேகப்பைகளில்           அடைத்து அனுப்புகிறது           இயற்கை நமக்கு          ஜி,ஸ்,டி, இல்லாமல். 422. பூ மலர்ந்ததும்         வண்டொன்று       வலம் வருகிறது        அதனை ரீங்காரமிட்டவாறே, 423. வாழ்வில்          மகிழ்ச்சி          துக்கம்          பயம்          கோபம்           வெற்றி           தோல்வி           ஆகியவையே            வலிமையாக்கிடும் உன்னை. 424. முயற்சி செய்          விடாது முயற்சி செய்          உன் இலக்கினை          நீ அடையும் வரை . 425, இரை கிடைத்தபின்       ...

84. உலா வருவோம்

 416, வெள்ளைத்தாளில்           வரைந்திட்டேன்            பறவை ஒன்றினை            பறக்காமல் அமர்ந்திருக்கிறது            சிறகு வரைய மறந்ததால். 417, பழுத்த இலை விழுந்து           துளிரும் இலைக்கு          வழி விட்டது, 418, சரியானதை           சரியான நேரத்தில்          சரியாகச்செய்தால்        சரியாக         பறித்திடலாம்        வெற்றிக்கனியை. 419. உன்னிடம்          இருப்பது         இறைவன் கொடுத்தது         இல்லாதது         இறைவன் கொடுக்கப்போவது. 420. மலையின் உச்சியில்  நின்றால்         மலையும் உன்னை விட          உயரம் குறைவு தான்.       ...

83, உலா வருவோம்

 411. எதிரே வந்தவர்           புன்னகைத்தார்           நானும்           புன்னகைத்தேன்            புன்னகைதானே           அன்பிற்கான தொடக்கம். 412. மனதை அமைதிப்படுத்து           மனக்காயங்கள் ஆறிட            மருந்து அது ஒன்றே. 413.சிரிக்கும் காந்தியைக் கொடுத்து        சில்லறைகளுடன்         சிந்தை மயங்கி         சிரித்துக் கிடக்கிறான்       குடிமகன். 414. முதியோர் இல்லத்தில்           மரணித்த தாய்க்கு          வீட்டில் திதி கொடுத்தான்         மகன், 415. நாட்டில்          நல்லவன் யார்         கெட்டவன் யார்         தீர்மானிக்கிறது         சூழ்நிலை.

82. உலா வருவோம்

 406. பிடிவாதங்கள் தளர்ந்து           காலத்தின் போக்கில்          கரைந்து கொண்டிருக்கிறேன்          எதிர்பார்ப்புகள்           ஏதுமின்றி. 407,கடற்கரை மணலில்          பாதச்சுவ்டுகள்          குவிந்து கிடைக்கின்றன            மாறும் தன்மையிலும்           மாறாதவைகளாக, 408. அநீதியைக் கண்டு          மனம் கொந்தளித்தாலும்          மௌனமாய் இருந்திடு          என் கிறது வயது. 409.இறுதிச் சடங்கில்         முதன் முதல் பார்த்த         அழகிய முகம்         நினைவில் வந்து தொலைக்கிறது, 410.வயது ஆக ஆக         விலகுகின்றனர் நண்பர்கள்         வயது           அவர்களுக்கும்...

81. உலா வருவோம்

 401. அதிகம் துள்ளும்           மீன்கள் தான்           அதிகமாக வலையில்            சிக்குகின்றன. 402. எல்லாம் தெரியும்           என்கிறான்         ஏதும்  தெரியாதவன். 403. எழுத்தில் பிழையிருப்பினும்          ஏற்றுக் கொள்கிறது         இணையதளமென்னும்         சங்கபலகை. 404. இரைச்சல் தாங்கவில்லை           மௌனமே              மௌனம் ஏன் இன்னும்.? 405, ஓய்வூதியம் தொடர்ந்திட          உயிர் வாழ் சான்றிதழ்          கொடுத்து திரும்பினேன்          விண்ணிலிருந்து          இறைவன் பார்த்திருக்ககூடும்.  .