1-உலா வருவோம்
கவிதை பல படைத்திட
கணேசனையும்
கலைவாணியையும்
வணங்கி
வலைப்பதிவு இதனை
தொடங்கினேன் இன்று
இன்ப உலா வருவோம்.
விழித்தெழுவோம்
-----------------------------------
சுட்டும் விழிச் சுடர்
சூரிய சந்திரர்
வட்டக் கரிய விழி
வானக் கருமை
என்றிட்டான் மீசைகவி
விழியே கதை எழுது
என்றிட்டான் கவியரசன்
கயல்விழி
மான் விழி
என்றெல்லாம் கவிஞர்கள்
ஒப்பிட்டார்கள் விழியை.
இதயத்தின் வாசல்
விழியல்லவா
விழி வரவேற்கிறது
விழி அன்பைப் பொழிகிறது
விழி பேசுகிறது
விழி அழுகிறது
விழி பார்க்கின்றது
விவேகானந்தர் சொன்ன
எழுமின் விழிமின் படி
செயலில் உடன் இறங்குவோம்
அறியாமையை விரட்டுவோம்
விழித்தெழுந்திடுவோம்.
-------------------------------
1. மொட்டுக்களை பறிக்காதீர்கள்
மலரும் வரையேனும்
தாயுடன் இருக்கட்டும்.
2.உயிர் மெய் எழுத்தென்ன என
கேட்டதும் சொன்னது
காகம்.
3.விடைதேடும் பயணம் தானே
வாழ்க்கை?
அதற்கு முடிவேது,விடையேது?
4.கோபம் இருக்குமிடத்தில்
குணம் இருக்குமாம்
உண்மையாய் இருக்கலாம்
ஆயின்
கண்டிப்பாக
கற்பனை இருக்காது
5.தேவாலயத்திலிருந்து
சொர்க்கவாசல் காண
இஸ்மாயில் கிளம்பினான்,
Comments
Post a Comment