21. உலா வருவோம்
101. மகனுக்கு
பழ மரங்கள் நட்டவர்
தோப்பை அழித்து
மகனை தொலைதேசம்
அனுப்பிய பின்
தனிமர தோப்பாய்
இன்று
102. கொக்கொன்று பறக்கிறது
குறி வைக்கின்றான் வேடன்
வெள்ளை சிறகொன்று
வந்து கொண்டிருக்கிறது
சமாதானமாக.
103. வாழ்வா.....சாவா
போராட்டத்தில் ஒரு உயிர்
சாலை நடுவே
எள்ளளவும் காப்பாற்ற முயலாது
படம் பிடித்து
விளம்பரப்படுத்திக் கொள்ளும்
செத்து தொலைந்த
மனித நேயத்துடன்
மக்கள்.
104, சிரிக்கும் போது.
ரசிக்கமுடிந்த
வாழ்க்கையை
துன்பத்தின் போதுதான்
புரிந்துகொள்ள முடியும்.
105, மாற்றம் மட்டுமே
மாறாதது என்றவன்
மறந்திட்டான்
வாழ்க்கை முறையே
மாறிவிட்டென்பதை மறந்து.
Comments
Post a Comment