4. உலா வருவோம்
16. மலர்களை உதிர்த்திருந்தது செடி அவைகளுடன் உதிர்கிறது சருகு நானும் வீழ்கிறேனே என. 17. சிலரை நினைத்தால் சிரிப்பு வருகிறது ஒரு வேளை என்னை நினைத்தால் அவர்களுக்கு சிரிப்பு வரக்க்கூடும். 18.எழுத்தாளன் நான் என்றிட்டேன் ஆதார் இருக்கிறதா என்றார் ஆதார் அட்டையை காட்டினேன் ஆதார் என்றார் மீண்டும் அந்த வட இந்தியர் 19,உனக்காகவே பூத்திருக்கின்றேன் மலர்கள் சொல்லவில்லை மங்கையர் சொல்லவில்லை மனங்கள் சொல்கின்றன, 20. தவறு தவறு தான் நேற்று நடந்திருந்தாலும் சரி இன்று நடந்திருந்தாலும் சரி.