36.உலா வருவோம்
176.செல்லும் இடமெல்லாம்
வெல்லும் மனப்பாங்கு
தவறில்லை,,, ஆயின்
தோற்போர்
தோற்றுக்கொண்டே
இருக்க வேண்டுமா?
நெஞ்சே உரைத்திடு.
177, தாத்தா சொத்தை
அப்பா விற்று
அறிவாளியாய் ஆக்கினார்
அவனை.... பின்னாளில்
தனக்கு சேர வேண்டிய
சொத்தை விற்றுவிட்டார் என
நீதி மன்றத்தில்
வழக்கு தொடர்ந்தான்
அப்பாமீது,
178. மனப்புண்ணை
ஆற்றிடும்
அருமருந்து
அமைதியே,
179ஆண்பால்
பெண்பால்
பலர் பால்
பலவின் பால்
தமிழ்ப்பால் போதித்தார்
தமிழாசிரியை பள்ளியில்
வீட்டிலோ குழந்தை
வீல் வீல் என அழுதது
தாய்ப்பால் நினைப்பால்.
180.என்னுள் இருப்பவன்
எது சொன்னாலும் செய்வதால்
என்னை பிடிக்கிறது
என்றும் அவனுக்கு,
Comments
Post a Comment