34. உலா வருவோம்
166. குளத்து நீரில்
தந்தை அருகில் இருக்க
தவளைக்கல் எறிந்தேன்
எத்தனை தந்தைகள்
மகன்களின் அருகில்
167. இரை கிடைத்ததும்
இறைவனை மனதில்
நினைத்திரு,
168.இயற்கை
முட்களின் நடுவே
மலரை வைத்ததே
மலர் கசங்கிவிடாது
இருக்கத்தான்,
169, தீபம்
எண்திசையிலும்
பாகுபாடின்றி
ஒளி பரப்புகிறது.
170. உயிரின் விலையை
மருத்துவ மனைகள்
தீர்மானித்துக்
கொண்டிருக்கின்றன.
Comments
Post a Comment