10. உலா வருவோம்

 46. தேய்ந்து தான் கொண்டிருக்கிறது

         நிலவு வளர்பிறை நோக்கி.


47.கா..கா..

     கரைந்தது 

     காகம் ஒன்று

     அரும் பசி போலும்

     அன்னம் சற்று இட்டதும்

     சற்றே தொனி மாற்றி

     கா. கா.. என்றது

     அதன் மொழியில்

      நன்றி சொல்கிறதோ!


48.  முதலும் முடிவும் தெரியா

       சிக்கல் விழுந்த நூல்கண்டாய்

       வாழ்க்கை.


49.போகும் ஊருக்கு

      வழியைக் கேட்டால்

      போகாத ஊருக்கு

      வழியை சொல்கிறார்கள்

      அதனால் என்ன 

      போகாத ஊருக்கும்

       ஒருநாள் போகவேண்டியதுதானே.


50. தளர்ந்த நிலையிலும் 

      விரல் நீட்டும்

      விழுதுகளை நினைப்பதில்லை

      நாணலை நம்பி

      நர்த்தனம் ஆடுவோர்,          

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

14.உலா வருவோம்

2. உலா வருவோம்