31. உலா வருவோம்
151. குளத்தில் நீர் அசையாமல்
நிலவில் பிம்பத்துடன்
காதலில்
கல்லொன்று எறியப்பட்டு
சிதைகிறது காதல்.
152. மனதை அமைதிப்படுத்து
மனக் காயங்கள் ஆறிட
மருந்து அது ஒன்றே.
153. மனித முகங்களின்
முகமூடியை கழட்ட முடிந்தால்
முகங்கள் பல இருப்பதை
பார்த்திடலாம்,
154.வல்லவனுக்கு
வல்லவனும் உண்டு
உணராதவனை
காலம்
காலடியில் போட்டு
நசுக்கிவிடும்
155. அப்பா......
நீ பார்க்க
அழமாட்டேன்
என் கண்களுக்கு
கண்ணீரை விழுங்கத்தெரியும்.
Comments
Post a Comment