43.உலா வருவோம்
211.. கரையயோரம் வாழ்பவன்
கரையேறத் தெரியாத
கரையோரம் ஒதுங்கியவனை
கரையேற்றி வைத்தான்,
212. தேங்கியிருக்கும்
நீரில்
பேரூந்தில் இருந்து
டீசல் சிந்தி
தரையில் வானவில்.
213. இந்து என்றும்
இஸ்லாமியர் என்றும்
கிறிஸ்துவர் என்றும்
ஏனிங்கே பல மதங்கள்?
மனிதன் என்றே இணைவோம்
மனிதநேயம் காப்போம்
முழங்கினவன் கட்சி கூட்டத்தில்
அன்றுதான் இணைந்தவன்
பின்னால் அமர்ந்திருந்த தலைவர் கேட்டார்
பேசுபவன் என்ன ஜாதி என்று.
214. நான் இருக்கிறேன்
தைரியமாக இருங்கள்
சொன்னார் நோயாளியிடம்
அறுவை சிகிச்சை மருத்துவர்
ஆனால் அடுத்தநாள் அவர்
வரவில்லை
215. அன்பை விதையுங்கள்
அமோகமாய்
அறுவடை செய்யலாம்
இன்பத்தை.,
Comments
Post a Comment