44. உலா வருவோம்
216. காசை கரியாக்குகிறான்
என பட்டாசு வெடிக்கும் மகனை
திட்டியபடியே
கரியை தணலாக்கி
சலவை பெட்டியில் இட்டு
துணிகளில் தேய்த்து
காசாக்குகிறான்
சலவைத்தொழிலாளி.
217. இப்போதெல்லாம்
உள்ளம் சொல்வதை
உதடுகள் சொல்வதில்லை
பலருக்கு,
218, விடியலில் மலர்ந்து
மாலையில் மறைந்தாலும்
இருக்கும் வரை மணம் வீசும்
மலருக்குத்தான்
எவ்வளவு மகிழ்ச்சி
தன் வாழ்நாளை எண்ணி.
219.வாழ்க்கையில்
வேகத்தடைகள்
எவ்வளவு வந்தாலும்
அஞ்சாது பயணித்து
வெற்றிக் கனியை
பறித்திடு.
220. பிறருக்கு வழங்கியதை
நினைவில் நிறுத்தாதே
பிறரிடமிருந்து பெற்றதை
நினைவில் மறவாதே.
Comments
Post a Comment