45. உலா வருவோம்
221. கண்கள்
கண்ணீரால் சாதிக்கும்
நீல நயனங்கள்
தூண்டில் போடும்
கவர்ந்திழுக்கும்
கதை பேசும்
கவிபாடும்
மனதைக் கவ்வி
நவரசம் காட்டும்
அகத்தின் அழகு முகத்தில்
முகத்தின் அழகோ
கண்களில்.
222.தான் மதிப்பு மிக்கவன்
என
ஆணவத்தால்
வெளிவராதவன்
குப்பையிலும்
சாக்கடையிலும்
சீந்துவாரின்றி
கிடக்கிறான்
மனித வாழ்வு
இதுதான் என .
223, கொக்கொன்று பறக்கிற்து
குறிவைக்கிறான் வேடன்
வெள்ளை சிறகொன்று
வந்து கொண்டிருக்கிறது
சமாதானமாக,
224. ஏரிகளின் மீது
கட்டப்பட்ட கல்லறைகள்
அடுக்குமாடி கட்டிடங்கள்.
225.நேற்று வறட்சி
இன்று மழை வெள்ளம்
நாளை வரப்போகிறது
மீண்டும் வறட்சி.
Comments
Post a Comment