46. உலா வருவோம்
226. மணம் செய்து கொள்ள
விருப்பம் தான்
தாய் தந்தை இல்லா
எவரேனும் இருந்தால்
என்கிறாள் புதுமைப்பெண்.
227. நேரம் இல்லை என்பவன்
நாளும் இதையே சொல்வான்
வாய்ப்பு இல்லை என்பவன்
வாளாய் இருந்துபேசுவான்.
228.தூண்டிலுக்கு தப்பியது
வலைக்கு தப்பியது
நீர் வற்றியதால்
மரணத்துக்கு தப்பவில்லை,
229,பௌர்ணமி இரவு
தெளிந்த நீரோடை
கரையில் அவள்
நீரில் நிலவுகள்
களங்கத்துடன் ஒன்று
களங்கமின்றி ஒன்று.
230, விடியலில்
நடைப் பயிற்சி
பைரவர்கள்
பலர்
பாதுகாப்புடன் .
Comments
Post a Comment