47. உலா வருவோம்

 231. ஓய்வெடுக்கையில் 

         அழகாய் வந்து

         அமர்கிறது 

         சொற்கள்

         நினைவடுக்கைகளில்

         எழுதுகோலை எடுக்கையில் 

        எங்கோ 

       காணாமல் 

       போய்விடுகின்றன


232. வியர்வை முத்த 

       சிந்தி விவசாயி

       விளைவித்த 

      நெல் முத்துகள்

      பண்ணை வீட்டு பத்தாயத்தில்.


233. எத்தனையோ 

        எண்ணங்கள்

       அத்தனையும் சொன்னால் 

      அவனிதனில் பொல்லாப்பு 

      ரௌத்திரம் பழகினாலும் 

     எண்களை எண்ணியே 

    என் காலம் செல்கிறது,

234. மரங்கள் 

        வெட்டப்படுகின்றன

       காரணம் 

      நாளை 

     மரநடு விழாவாம்,


235. " ங " 

      வை காதலித்தேன் 

      சொல்லவில்லை

      எப்போதும் 

      உடன் 

      " க " 

    சகோதரன் 

    இருப்பதால்,

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

14.உலா வருவோம்

2. உலா வருவோம்