48. உலா வருவோம்
236. வாசமுடன்
மொட்டொன்று வளர்ந்து
மலராகியது
சூடுவாரின்றி
பிறவிப்பயன் பெறாது
உலர்ந்து-உதிர்ந்து
மீண்டு நம்பிக்கையுடன்
மொட்டாய் வளர்ந்து
எதிர்பார்ப்புடன்
காத்திருக்கிறது.
237. ஓடுமீன் ஓட
உறுமீன் வர
காத்திருந்தது கொக்கு
பார்வை இல்லை
என்பதை மறந்து
பூனையோ
தன் கண்மூடி
உலகமே இருள்
என்றது.
238. மழை
குளிப்பாட்டிவிட்டதும்
வெயில் வந்து
துவட்டி விட்டதும்
மர இலைகளில்
பளிச்சிடுகிறது
ஆரோக்கிய பசுமை
239. வருவது போல
போக்குக் காட்டி
வராமல் நகர்ந்திடும்
கார் மேகமாய்
கற்பனை.
240. தான்
வளரவேண்டும்
என்பதை விட
அடுத்தவர்கள்
வளர்ந்துவிடக்கூடாது
என்ற எண்ணம்
பலருக்கு உண்டு.
Comments
Post a Comment