49.உலா வருவோம்

 241. வெள்ளைத்தாளை தாவி எடுத்ததும் 

         சொற்கள் வந்து விழுகின்றன.

         பொருள்கள் பிறக்கின்றன

        காணும் காட்சி யாவும் 

       கவிதையாய் அமைகின்றன.


242. அடர்ந்த மர நிழலில் 

        அமர்ந்துள்ளவன் மீது 

        கிளைகள் அசைகையில்

       இடுக்குகள் வழியே

       வெயில் விழத்தான் செய்கிறது,


243. எப்படி இருக்கீங்க 

        என் கேட்பவர்கள்

        அனைவரும் 

        நீங்க எப்படி இருக்கீங்க 

        எனும் பதிலையே

        எதிபார்க்கின்றனர்.


244.நான் சாதியம் பார்ப்பதில்லை 

        என்றிட்டான்

        சாதி சான்றிதழை 

        பார்க்காதது போல பார்த்த 

       நேர்முகத் தேர்வாளன்,


245. அகல் விளக்கொன்று 

        அடக்கமாய் 

        அடங்கி எரிகிறது

        அகலவில்லை மனம்

       அதிலிருந்து. 





.

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

14.உலா வருவோம்

2. உலா வருவோம்