9. உலா வருவோம்
41.வறுமை இல்லா
முதுமை
முழுமை தான்.
42, உறங்குகையில்
தாழ்ந்த ......இமைகளை
மயிலிறகு போல என்றிட்டான்
கவி ஒருவன்
கவிதைக்கு உண்மையும்
அழகு தான்.
43. சனியனே.....
எங்கே போனே?
குழந்தையை.....திட்டியபடியே
நவக்கிரகம் சுற்றுகிறாள்
சனி பார்வை விலக
ஒரு அன்னை,
44. விடியலின்
பனித்துளிகள்
போதையில்
மலர்கள்.
45. விரிந்த சிறகுகளுடன்
விண்ணில் பறவை ஒன்று
இலக்கு நோக்கி......
விரிக்க சிறகின்றி
இலக்கில்லாமல் மண்ணில்
நான்.
Comments
Post a Comment