33. உலா வருவோம்
161. எங்கு எங்கு என்றும்
இங்கு இங்கு என்றும்
தேடலிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது
தினமும் வாழ்நாள்
நமக்கு,
162. மனம்
அமைதியாய் இருக்கிறது
கடலின்
ஆழமான பகுதியில்
அலைகள் இருப்பதில்லை,
163.மலர் நீ என்றேன்
வாடிடுவேனா என்றாள்
நிலவு நீ என்றேன்
களங்கத்துடன் சேர்ந்து
வளருபவளா என்றாள்
வம்பே வேண்டாமென
தமிழ் நீ என்றிட்டேன்
முகம் மலர்ச்சியைக்
காட்டியது,
164. மலையின் உச்சியில் நின்றால்
மலையும் உன்னைவிட
உயரம் குறைவு தான்.
165. நா காக்காமல்
நாவினால் சுட்டுவிட்டு
வார்த்தையால்
மன்னிப்பு கேட்டுவிட்டால்
மறைந்திடுமா வடு
Comments
Post a Comment