35.உலா வருவோம்

 171. நிலத்தின் விருப்பத்தைக்

         கேட்டு

         கரு மேகங்கள்

        மழையினைப்

       பொழிவதில்லை,


172. சரியானதை

       சரியான  நேரத்தில்

       சரியாகச்செய்தால்

       பறித்திடலாம்

      வெற்றிக்கனியை.

173. மனம் என்பது ஒரு 

         நிலைக்கண்ணாடி

         மாசின்றி வைத்துக்கொள்வதும்

        தூசு படியாமல் 

        பார்த்துக்கொள்வதும் 

        நம் செயல்களே,

174.அறை முழுவதும்

        வெளிச்சம் தரும்

        மெழுகுவர்த்தியால்

        தன் நிழலுக்கு

        வெளிச்சம் தர முடிவதில்லை,

175. கடல் நீரை

        குடி நீராக்கி

        மேகப்பைகளில் 

        அடைத்து 

        நமக்கு 

        இயற்கை அனுப்புகிறது.

        GST  இல்லாமல்,

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

14.உலா வருவோம்

2. உலா வருவோம்