39. உலா வருவோம்

 191. சவ்வுக்கால் பரப்பி

         துள்ளிக்கொண்டிருக்கிறது

         எனக்கு எல்லாம்

         தெரியுமென

        கிணற்றுத்தவளை.


192. எழுத்தாளர்களுக்கு 

       ஓய்வு ஏது

       கனவுகளிலும் 

      எழுதிக்கொண்டுதான் 

      இருக்கிறார்கள்.


193. பேசாத நாக்கு 

         பெரும் பாக்கியம் 

         பெற்றது.


194.நினைவில் வாழும் 

       தந்தைக்கு 

      இன்று பிறந்த நாள்

    அவர் கொண்டாடதை

  கொண்டடிக்

கொண்டிருக்கிறேன்

நான்


195. கண்ணீர் துளியை

        கையால் துடைக்காதே

        பதிலால் துடை. 


Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

14.உலா வருவோம்

2. உலா வருவோம்