51. உலா வருவோம்
251.விட்டுக்கொடுத்தல்
என்றால் என்ன
என்றிட்டான்
நீயே எழுதிக்கொள்
என்றேன்.
252, முன்னேற
ஆசைப்பட்டாலும்
தொழில் நுட்ப அறிவு
பின்னுக்கு
தள்ளுகிறது,
253. உண்ணும் அரிசியில்
உன் பெயர்
எழுதி இருக்கும்
அப்பா சொன்னார்
எறும்பு இழுத்துச்
செல்லும் அரிசியில்
அதன் பெயர்
இருக்குமா?
நான் கேட்கவில்லை.
254. கடினமான
பாறைகளும்
உளியின் வலி
பொறுத்தால்
தெய்வமாகலாம்
255. மரியாதை என்பது
தகுதியாளருக்கு
கிடைப்பது
கேட்டு பெறுவதல்ல,
Comments
Post a Comment