52. உலா வருவோம்
256. பயணித்தேன்
உற்றார் உறவு
நண்பர்கள்
நம்பிக்கைத் துரோகிகள்
ஏதுமறியாதோர்
என
யார் யருடனோ
அவரவர் வழியில்
அவரவர் இறங்க
தனியனாய்
இறுதியில்
நான்,
257. மழை பெய்திடின்
வெயிலுக்கு
ஏங்குகிறது
வெயில்
அதிகரிக்கையில்
மழையை வேண்டுகிறது
மனம் ஒரு
குரங்கு தான்.
258. விடியலில்
விரைவாக
வரிசை கலையாது
எறும்புகள்
எங்கே போகின்றன,
259. கல்விக்கடவுளான
சரஸ்வதியை
அல்லும் பகலும்
துதிக்கவேண்டும்
அப்படி துதித்தால்
அது ஒரு கல்லாய் இருந்தாலும்
கவி சொல்லும் ஆற்றல்
வந்துவிடும்.
260 அவன் அதிகம்
பேசுவதில்லை
அறிவாளி
என்கிறார்கள்
பேசத்தொடங்கினால்
தெரியும்
அறிவிலி என்று..
Comments
Post a Comment