53.உலா வருவோம்
261. ஓடு மீன் ஓட
உறு மீன் வர
காத்திருந்தது கொக்கு
பார்வை இல்லை
என்பதை மறந்து
பூனையோ தன் கண் மூடி
உலகமே இருள் என்றது.
262. என்னைச்சுற்றி
ஆதரவு யாருமில்லை
ஏனெனில்
நான் போலியில்லை.
263. ரசிக்கத்தெரியா என்னை
ரசிக்கும்படி
கவிதை எழுதச் சொன்னால்
என் செய்வேன்
எண்ணுகையில்
நான் இருக்க பயமேன்
நலமுடன் சொன்னது
அன்னைத்தமிழ்.
264. சில நண்பர்களை
நாட்கணக்கில்
மாதக்கணக்கில்
வருடக் கணக்கில்
பார்க்காவிடினும்
நட்பு தொடர்கிறது
அவர்கள்
சிறப்பானவர்கள்.
265. உனக்கு நான்
எனக்கு நீ
அவ்வளவே.
Comments
Post a Comment