54. உலா வருவோம்

 266. வெடித்து சிதறின

         வெடிகளின் ஓசை 

       அதில் 

      அதை தயாரித்த 

      குட்டிக் கரங்களின் 

     விசும்பல் ஓசை 

     அடங்கிப் போயிற்று,

267.கவிதை ஒன்றை 

      எழுதத் தொடங்கினால்

     சொற்கள் 

    ஒத்துழைக்காமல் 

   அடம் பிடித்துக் 

   கொண்டிருக்கின்றன


268,தாயை விட்டு 

       பூவை பறிக்கையில் 

       பிரிவு எண்ணி 

       சொட்டு தண்ணீர்

       செடியில்.


269.சீந்துவாரின்றி 

       தெருவோரத்தில்

       கிடக்கிறது சற்றே நாற்றத்துடன் 

      நுனியிலையாய் 

      நேற்று போற்றப்பட்ட 

       வாழையிலை.


270, இன்று 

       மனம் புரவியாய் ஓட 

      கைகளோ 

     நத்தையாய்  ஊர 

   தட்டச்சு 

  திகைத்து செயல்பட 

கணினி விழிக்கிறது 

செய்வதறியாது.

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

14.உலா வருவோம்

2. உலா வருவோம்