55.உலா வருவோம்

 271.படித்துக் கொண்டிருந்தேன் 

        படுத்துக்கொண்டும் இருந்தேன் 

       படுத்தாதீர்கள் 

      என்றிட்டாள் இல்லாள்.


272, ஐஸ் வைத்தால் 

       காரியம் ஆகுமாம்

       யார் சொன்னது

      அவன் அதுவானதும் 

     ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டதில் 

     அவனது காரியம் தான் ஆயிற்று 

    இவர்களது செலவில்..

273.சிம்பொனியும் 

       அமைக்கவில்லை 

      திரையிசையும் தெரியாது

      காலையில் கூவி அழைக்கும் 

      இசைஞானி குயில்.


274, பாட்டிகளும்

         தாத்தாக்களும் 

         கதை சொன்ன காலம் போய் 

         இப்போதெல்லாம் 

         AI சொல்லிக்கொண்டிருக்கிறது.


275. பிறந்தது மார்கழி 

         ஒரு சிறு புள்ளியில் 

        ஆரம்பித்து 

        பெரும் கோலங்கள்

       வரவேற்க தொடங்கியுள்ளன.


Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

14.உலா வருவோம்

2. உலா வருவோம்