56.உலா வருவோம்

 276. பூக்கும் மலர் 

இறைவனுக்கோ

   கூந்தலுக்கோ

  போகாவிடின் 

  குப்பைக்குத்தான் 

போகவேண்டியுள்ளது.


277. நன்கு படித்தேன் 

       நன்கு சம்பாதிக்க 

       நன்கு  சம்பாதிக்கிறேன் 

      நன்கு படிக்கவைக்க,


278.லஞ்சம்  வாங்குவது குற்றம் 

      நுழைவாயில் கதவில் வாசகங்கள்

     அதற்கு சற்று கீழே

     தள்ளு என்றிருந்தது

    வந்தது குழப்பம் 

   சாமான்யனுக்கு.

279. வானத்தின் மீது 

        சூல்கொண்ட 

        மழை மேகம் 

        மெதுவாய் நகர்ந்து 

        மழை நீரை 

        பிரசவிக்கிறது,

280. ரயில் நிலையத்தில் 

        வரவேற்க வந்தவரின் 

        பார்வையோ 

       என் கை மஞ்சள் பையில்,

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

14.உலா வருவோம்

2. உலா வருவோம்