57. உலா வருவோம்
281. நம் பிரச்சனைகள்
சிரமங்களுக்கு
மற்றவர்கள் அல்ல
நாமே காரணம்.
282. கொதிநீரில்
பிம்பங்கள் தெரிவதில்லை
குழம்பிய மனதில்
தீர்ப்புகள் தெரிவதில்லை
அமைதியாய் இருந்து
அணுகுவோம் சிக்கல்களை.
283, மகிழ்ச்சி என்பது யாதெனின்
பிற உயிர்களிடமிருந்து
அன்பை பெறுவது அல்ல
அன்பை அளிக்கும் போது
கிடைப்பதே,
284.அதிருப்தி
சோகம்
தோல்வி விட்டகல
விட்டொழிப்போம்
தான் எனும்
அகந்தையை,
285. இந்த ஆண்டு
குளிர் அதிகம்
பேசிக்கொண்டன்
போர்வைகள் இரண்டு,.
Comments
Post a Comment