Posts

68. உலா வருவோம்

 336.  கல்  எனஎண்ணினேன்              கசிவு தெரிந்தது            ஓரத்தில்.  337. கவிதை ஒன்றை           எழுத தொடங்கினால்           சொற்கள் ஒத்துழைக்காமல்           அடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. 338. உன்னைப்பற்றி நீயே          உயர்வாய் எண்ணுவ்து         உன் கண்ணில் விழும் தூசி போல        உறுத்திக் கொண்டே இருக்கும்        உள்ளவரை.. 338. ஆணவத்தால்         அகங்காரத்தால்          காழ்ப்புணர்ச்சியில்          சாதிக்க முடியாததை         சாதித்திடலாம் அன்பினால். 339,அளவுக்கு மீறிய நிதானம்         அளவுக்கு மீறிய அவசரம்        முடிவு....        தோல்வியே,,, 340, முதிர்  கன்னியாய்...

67. உலா வருவோம்

 331. தாய் மொழி தினமாம்          தாயும் தந்தையும்          தாய்மொழியும் தானே          நம்மை         வழிநடத்துகிறது. 332. நான் தமிழ் கவிஞன் தான்           மறைந்ததும்          தரணியில் போற்றப்படுவேன்         ஏனெனில்         வாழும்போது         புறக்கணிக்கப்படுவதால். 333. இருளில் நான்          நிழலின் துணையும்         இன்றி தனியனாய். 334. அமைதியாக           ஆரவாரம் இல்லாது           சிந்தித்து செயல்பட்டால்           வெற்றி           தொட்டுவிடும் தூரமே. 335.அன்பு சுகமானது          காரணமே இல்லாமல்          சிலரை பிடித்துவிடுகிறது       ...

66.உலா வருவோம்

 326. மரம்பழுத்த           இலைகளை           உதிர்த்து விடுகிறது        தன்னை விட்டு......       மரம்மட்டுமா? 327.கனவுகளை நான்         நேசிக்கிறேன்         அதிலாவது எனது         லட்சியங்கள்         நிறைவேறுவதால். 328. தோல்விகள்        வெற்றியின் படிக்கட்டுகளாம்        ஏறிக்கொண்டிருக்கிறேன்          எவ்வளவு படிகள்           என்று அறியாமல். 329. அன்பு சுகமானது          காரணமேயில்லாமல்          சிலரை          பிடித்துவிடுகிறது.         அன்பிற்கில்லை          அடைக்கும் தாழ். 330.தொலைத்து விட்டதை .            தேடிக்கொண்டிருக்கிறேன்       ...

65.உலா வருவோம்

321. விளம்பர வெளிச்சம்          விழாதவரை          சாமான்யனின் திறமை        வெளிச்சமே அறியா        இருள் தான். 322. நம்முடனோ         நாம் இல்லாமலோ         உலகு இயங்கவே போகிறது,         உணர்ந்துகொண்டு           இருக்கும் வரை           இல்லாதது போலவே          இருந்திடுவோம். 323.வெ ளிச்சம் தரும்         மெழுகுவர்த்தியாலும்         தன் நிழலுக்கு         வெளிச்சம் தர இயலாது என         கதை பேசிடவேண்டாம்              அதனருகே         வெளிச்சம் தரும்        வேறொரு  வர்த்தியை  ஏற்றுங்கள்        நிழலுக்கும் வெளிச்சம் வந்திரடும். 324.  சோதனை மேல்  ...

64. உலா வருவோம்

 316, ஆயிரம் காலப்பயிர் என்          ஆயிரம் யோசித்து          ஆயிரம் நூறு கணக்கில் கொடுத்து          பத்து சத்திரம் பார்த்து         விதைத்தது           வானம் பார்த்த பூமியாய்           விவாகரத்து எனும்           வறட்சி பிடிவாதத்தால்              அழிந்தது. 317. கொதிநீரில்          பிம்பங்கள்         தெரிவதில்லை         குழம்பிய மனதில்          தீர்ப்புகள் தெரிவதில்லை          அமைதியாய் இருந்து          அணுகுவோம் சிக்கல்களை. 318. வாழ்வில்           திரும்பி கிடைக்கா          பொழுதுகள்          எவ்வளவை         தொலைத்துள்ளோம். 3...

63.உலா வருவோம்

 311. செடியில்           பூவைக்கண்டேன்          காயினைக் காணேனே         என்றிட்டான்        செடிகள்         பூத்துத்தானே காய்க்கும் என்றேன்         பூசணிக்கொடி         காய்த்துத்தானே         பூத்திடும் என்றான்         சுட்டப்பழம் வேணுமா        சுடாப்பழம் வேணுமா        என்றிட்டவனைப்  போல. 312. நாளை          நாளை என          நாளும் நகர்கிறது          நாளை எந்த          நாளை என         நாளை எதிர்நோக்கி         நாளும் நான். 313. வளரும் செடிக்கே          தண்ணீர் தேவை         மரங்கள்          தானே தேடிக்கொள்ளும். 314....

62.உலா வருவோம்

 306. ஆடை அணிகலன்          அரசனுக்கான ஒப்பனை        கலைத்த பின்னர்       மேடையின் பின்னால்       உழைப்புக் கூலிக்காக     காத்தி ருந்தான்     நாடக நடிகன், 307. கேட்டேன்          கிடைத்தது        கிடைக்கிறதே என       கேட்கவில்லை        கிடைக்கவில்லை. 308. நான்         நீ       நாம்        நமது      நாம்      நீ     நான், 309.ஐஸ் வைத்தால்       காரியம் ஆகுமாம்      யார் சொன்னது    அவன் அதுவானதும்    ஐஸ் வைக்கப்பட்டதில்  அவன் காரியம் தான்  ஆயிற்று  இவர்கள் செலவில். 310.பற்றற்றான் பற்றை        பற்றமுடியாது       கவிதையின் மீதான     பற்று தடுக்கிறது.