66.உலா வருவோம்
326. மரம்பழுத்த
இலைகளை
உதிர்த்து விடுகிறது
தன்னை விட்டு......
மரம்மட்டுமா?
327.கனவுகளை நான்
நேசிக்கிறேன்
அதிலாவது எனது
லட்சியங்கள்
நிறைவேறுவதால்.
328. தோல்விகள்
வெற்றியின் படிக்கட்டுகளாம்
ஏறிக்கொண்டிருக்கிறேன்
எவ்வளவு படிகள்
என்று அறியாமல்.
329. அன்பு சுகமானது
காரணமேயில்லாமல்
சிலரை
பிடித்துவிடுகிறது.
அன்பிற்கில்லை
அடைக்கும் தாழ்.
330.தொலைத்து விட்டதை .
தேடிக்கொண்டிருக்கிறேன்
தொலைந்ததும்
தேடிக்கொண்டிருக்கலாம்
என்ன.
Comments
Post a Comment