65.உலா வருவோம்
321. விளம்பர வெளிச்சம்
விழாதவரை
சாமான்யனின் திறமை
வெளிச்சமே அறியா
இருள் தான்.
322. நம்முடனோ
நாம் இல்லாமலோ
உலகு இயங்கவே போகிறது,
உணர்ந்துகொண்டு
இருக்கும் வரை
இல்லாதது போலவே
இருந்திடுவோம்.
323.வெ ளிச்சம் தரும்
மெழுகுவர்த்தியாலும்
தன் நிழலுக்கு
வெளிச்சம் தர இயலாது என
கதை பேசிடவேண்டாம்
அதனருகே
வெளிச்சம் தரும்
வேறொரு வர்த்தியை ஏற்றுங்கள்
நிழலுக்கும் வெளிச்சம் வந்திடும்.
324. சோதனை மேல்
சோதனை
சிவனே என்று இரு
வேதனைகள் அகன்று
வானமும் வசப்படலாம்,
325. மஞ்சள் நீராட்டு
நெற்றியில் சந்தனம் குங்குமம்
கழுத்தில் மலர் மாலை
இழுத்து வரப்பட
அம்மாவென அழைத்தபடியே
அழுகையுடன் வருகிறது
ஆலயத்துக்கு ஆடு,
Comments
Post a Comment