64. உலா வருவோம்
316, ஆயிரம் காலப்பயிர் என்
ஆயிரம் யோசித்து
ஆயிரம் நூறு கணக்கில் கொடுத்து
பத்து சத்திரம் பார்த்து
விதைத்தது
வானம் பார்த்த பூமியாய்
விவாகரத்து எனும்
வறட்சி பிடிவாதத்தால்
அழிந்தது.
317. கொதிநீரில்
பிம்பங்கள்
தெரிவதில்லை
குழம்பிய மனதில்
தீர்ப்புகள் தெரிவதில்லை
அமைதியாய் இருந்து
அணுகுவோம் சிக்கல்களை.
318. வாழ்வில்
திரும்பி கிடைக்கா
பொழுதுகள்
எவ்வளவை
தொலைத்துள்ளோம்.
319, விளையும் என
விதைத்து வி ட்டேன்
இனி
மண்ணிற்கும்
விதைக்கும்
மனமிருந்தால்
விருட்சமாகட்டும்,
320. காற்றடிக்கிறது
தூசு பறக்கிறது
மலையென்னவோ
அசையாதிருக்கிறது.
Comments
Post a Comment