62.உலா வருவோம்
306. ஆடை அணிகலன்
அரசனுக்கான ஒப்பனை
கலைத்த பின்னர்
மேடையின் பின்னால்
உழைப்புக் கூலிக்காக
காத்தி ருந்தான்
நாடக நடிகன்,
307. கேட்டேன்
கிடைத்தது
கிடைக்கிறதே என
கேட்கவில்லை
கிடைக்கவில்லை.
308. நான்
நீ
நாம்
நமது
நாம்
நீ
நான்,
309.ஐஸ் வைத்தால்
காரியம் ஆகுமாம்
யார் சொன்னது
அவன் அதுவானதும்
ஐஸ் வைக்கப்பட்டதில்
அவன் காரியம் தான்
ஆயிற்று
இவர்கள் செலவில்.
310.பற்றற்றான் பற்றை
பற்றமுடியாது
கவிதையின் மீதான
பற்று தடுக்கிறது.
Comments
Post a Comment