63.உலா வருவோம்
311. செடியில்
பூவைக்கண்டேன்
காயினைக் காணேனே
என்றிட்டான்
செடிகள்
பூத்துத்தானே காய்க்கும் என்றேன்
பூசணிக்கொடி
காய்த்துத்தானே
பூத்திடும் என்றான்
சுட்டப்பழம் வேணுமா
சுடாப்பழம் வேணுமா
என்றிட்டவனைப் போல.
312. நாளை
நாளை என
நாளும் நகர்கிறது
நாளை எந்த
நாளை என
நாளை எதிர்நோக்கி
நாளும் நான்.
313. வளரும் செடிக்கே
தண்ணீர் தேவை
மரங்கள்
தானே தேடிக்கொள்ளும்.
314. இசைக் கருவியின்றி
இசை எழுப்புகிறது
இளையராஜாவாய்
கடலலைகள்.
315. உன் பயணம் கூட
உன் கைகளில் இல்லை
உணர்ந்து கொள்
பற்றினை விட்டொழி
தாமரை இலைத்தண்ணீராய்
தரணியில் இருந்திடு
நிம்மதி நாடி வரும்,
Comments
Post a Comment