Posts

Showing posts from March, 2026

15..உலா வருவோம்

 71. வாழத்தெரியாதவர்களிடம்            வாழ்க்கை அவஸ்தை படுகிறது 72.அகங்காரம்          பொறாமை          பேராசை         உன்னை கெடுப்பதுடன்         உடன் இருப்பவரையும்        அழிக்கும். 73.. வருவது வரட்டும்         போவது போகட்டும்         நடப்பது நடக்கட்டும்        என்றிருந்திட்டால்        வாழ்வில் மகிழ்ச்சிதான். 74. பழுத்த இலையாய் பெற்றோர்         மலர்ந்த பூவாய் இல்லாள்         மலரத்துடிக்கும் மொட்டாய்  மகள்         தோட்டக்காரனாய் குடும்பத்தலைவன். 75.,இயற்கை          இரவுக்கு முன் மேற்கில்          கதிரவனை  விதைக்கின்றது          கிழக்கில் காலையில்          கதிரவன்     ...

14. உலா வருவோம்

  66.  கல்  எனஎண்ணினேன்              கசிவு தெரிந்தது            ஓரத்தில்.  67. கவிதை ஒன்றை           எழுத தொடங்கினால்           சொற்கள் ஒத்துழைக்காமல்           அடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. 68, உன்னைப்பற்றி நீயே          உயர்வாய் எண்ணுவது         உன் கண்ணில் விழும் தூசி போல        உறுத்திக் கொண்டே இருக்கும்        உள்ளவரை. 69, ஆணவத்தால்         அகங்காரத்தால்          காழ்ப்புணர்ச்சியில்          சாதிக்க முடியாததை         சாதித்திடலாம் அன்பினால். 70.,அளவுக்கு மீறிய நிதானம்         அளவுக்கு மீறிய அவசரம்        முடிவு....        தோல்வியே,,,

13. உலா வருவோம்

 61.. தாய் மொழி தினமாம்          தாயும் தந்தையும்          தாய்மொழியும் தானே          நம்மை         வழிநடத்துகிறது. 62. நான் தமிழ் கவிஞன் தான்           மறைந்ததும்          தரணியில் போற்றப்படுவேன்         ஏனெனில்         வாழும்போது         புறக்கணிக்கப்படுவதால். 63.. இருளில் நான்          நிழலின் துணையும்         இன்றி தனியனாய். 64.. அமைதியாக           ஆரவாரம் இல்லாது           சிந்தித்து செயல்பட்டால்           வெற்றி           தொட்டுவிடும் தூரமே. 65..அன்பு சுகமானது          காரணமே இல்லாமல்          சிலரை பிடித்துவிடுகிறது        ...

12.உலா வருவோம்

 56.. மரம்பழுத்த           இலைகளை           உதிர்த்து விடுகிறது        தன்னை விட்டு......       மரம்மட்டுமா? 57..கனவுகளை நான்         நேசிக்கிறேன்         அதிலாவது எனது         லட்சியங்கள்         நிறைவேறுவதால். 58. தோல்விகள்        வெற்றியின் படிக்கட்டுகளாம்        ஏறிக்கொண்டிருக்கிறேன்          எவ்வளவு படிகள்           என்று அறியாமல். 59.. அன்பு சுகமானது          காரணமேயில்லாமல்          சிலரை          பிடித்துவிடுகிறது.         அன்பிற்கில்லை          அடைக்கும் தாழ். 60,.தொலைத்து விட்டதை .            தேடிக்கொண்டிருக்கிறேன்       ...

11. உலா வருவோம்

 51.விளம்பர வெளிச்சம்          விழாதவரை          சாமான்யனின் திறமை        வெளிச்சமே அறியா        இருள் தான். 52,  நம்முடனோ         நாம் இல்லாமலோ         உலகு இயங்கவே போகிறது,         உணர்ந்துகொண்டு           இருக்கும் வரை           இல்லாதது போலவே          இருந்திடுவோம். 53..வெ ளிச்சம் தரும்         மெழுகுவர்த்தியாலும்         தன் நிழலுக்கு         வெளிச்சம் தர இயலாது என         கதை பேசிடவேண்டாம்              அதனருகே         வெளிச்சம் தரும்        வேறொரு  வர்த்தியை  ஏற்றுங்கள்        நிழலுக்கும் வெளிச்சம் வந்திடும். 54..  சோதனை மேல...