67. உலா வருவோம்

 331. தாய் மொழி தினமாம்

         தாயும் தந்தையும்

         தாய்மொழியும் தானே

         நம்மை

        வழிநடத்துகிறது.


332. நான் தமிழ் கவிஞன் தான் 

         மறைந்ததும் 

        தரணியில் போற்றப்படுவேன் 

       ஏனெனில் 

       வாழும்போது 

       புறக்கணிக்கப்படுவதால்.


333. இருளில் நான் 

        நிழலின் துணையும்

        இன்றி தனியனாய்.


334. அமைதியாக 

         ஆரவாரம் இல்லாது 

         சிந்தித்து செயல்பட்டால் 

         வெற்றி 

         தொட்டுவிடும் தூரமே.


335.அன்பு சுகமானது 

        காரணமே இல்லாமல் 

        சிலரை பிடித்துவிடுகிறது

        அன்பிற்கில்லை 

        அடைக்கும்தாழ். 

 

 

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

10. உலா வருவோம்

14.உலா வருவோம்