71, உலா வருவோம்

 351. என் மனமென்னும் 

           கடலில் 

           கல்லினை வீசி விட்டர்

           அது சென்றடையும் 

           ஆழத்தை அறியாது.


351, தண்ணீரில் வாழும் 

       கொழுத்த மீன்கள்

       பாலில் வாழ எண்ணி 

       வாழ்வை இழக்கின்றன.

352. கட்டுப்பாடு

        கருவிகள் ஏதுமின்றி 

       வலசைகள்

       வானில் செல்கின்றன.


353.என்னுயிர் நின்னிடத்தில் 

       தேநீர் கடையில்

       ஒலித்துக்கொண்டிருக்க 

       உயிரில்லாமல் 

      கேட்டுக்கொண்டிருக்கிறான்,


354. வைகறையில் 

        மயிலிறகால் 

        வருடியது போல 

        மனம்,


355.தினமும் சில 

       காலடிகளாவது 

       முன்னே

        எடுத்து வையுங்கள்

        இலட்சியம் நோக்கி 

        பயணம் சிறந்திடும்,

   

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

68. உலா வருவோம்

69.உலா வருவோம்