69.உலா வருவோம்
341. வாழத்தெரியாதவர்களிடம்
வாழ்க்கை அவஸ்தை படுகிறது
342. அகங்காரம்
பொறாமை
பேராசை
உன்னை கெடுப்பதுடன்
உடன் இருப்பவரையும்
அழிக்கும்.
343. வருவது வரட்டும்
போவது போகட்டும்
நடப்பது நடக்கட்டும்
என்றிருந்திட்டால்
வாழ்வில் மகிழ்ச்சிதான்.
344. பழுத்த இலையாய் பெற்றோர்
மலர்ந்த பூவாய் இல்லாள்
மலரத்துடிக்கும் மொட்டாய் மகள்
தோட்டக்காரனாய் குடும்பத்தலைவன்.
345,இயற்கை
இரவுக்கு முன் மேற்கில்
கதிரவனை விதைக்கின்றது
கிழக்கில் காலையில்
கதிரவன்
முளைத்து விடுகிறான்,
Comments
Post a Comment