70, உலா வருவோம்
346. பென்சில் செய்யும்
தவறெல்லாம்
அழிக்கும் அழிப்பானுக்கு
இணையுண்டோ
எத்தியாகமேனும்.
347. கவிஞன்
கவிதைகளைக் கொட்டினான்
கூறாக்கினான்
கூவினான்
கொள்வாருமில்லை
கொடுப்பருமில்லை.
348, நம்பி நம்பி
நாள்தோறும் ஏமாந்தாலும்
நம்பாமல்
இருக்க முடியவில்லை
நானிலத்தில்.
349, வெற்றிடங்கள் என்பது
வெற்றி இடங்கள்
வென்றிட தேவை
மக்கள் உள்ளங்கள்,
350, கூண்டுக்குள் நான்
சிறிது சிறிதாக
சிறகுகள்
கூண்டை விட்டு
வெளியேறச் சொல்லி
படபட க்கின்றன,
Comments
Post a Comment