Posts

Showing posts from December, 2025

56.உலா வருவோம்

 276. பூக்கும் மலர்  இறைவனுக்கோ    கூந்தலுக்கோ   போகாவிடின்    குப்பைக்குத்தான்  போகவேண்டியுள்ளது. 277. நன்கு படித்தேன்         நன்கு சம்பாதிக்க         நன்கு  சம்பாதிக்கிறேன்        நன்கு படிக்கவைக்க, 278.லஞ்சம்  வாங்குவது குற்றம்        நுழைவாயில் கதவில் வாசகங்கள்      அதற்கு சற்று கீழே      தள்ளு என்றிருந்தது     வந்தது குழப்பம்     சாமான்யனுக்கு. 279. வானத்தின் மீது          சூல்கொண்ட          மழை மேகம்          மெதுவாய் நகர்ந்து          மழை நீரை          பிரசவிக்கிறது, 280. ரயில் நிலையத்தில்          வரவேற்க வந்தவரின்          பார்வையோ         என் கை மஞ்சள் பையில்,

55.உலா வருவோம்

 271.படித்துக் கொண்டிருந்தேன்          படுத்துக்கொண்டும் இருந்தேன்         படுத்தாதீர்கள்        என்றிட்டாள் இல்லாள். 272, ஐஸ் வைத்தால்         காரியம் ஆகுமாம்        யார் சொன்னது       அவன் அதுவானதும்       ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டதில்       அவனது காரியம் தான் ஆயிற்று      இவர்களது செலவில்.. 273.சிம்பொனியும்         அமைக்கவில்லை        திரையிசையும் தெரியாது       காலையில் கூவி அழைக்கும்        இசைஞானி குயில். 274, பாட்டிகளும்          தாத்தாக்களும்           கதை சொன்ன காலம் போய்           இப்போதெல்லாம்           AI சொல்லிக்கொண்டிருக்கிறது. 275. பிறந்தது மார்கழி           ஒரு ச...

54. உலா வருவோம்

 266. வெடித்து சிதறின          வெடிகளின் ஓசை         அதில்        அதை தயாரித்த        குட்டிக் கரங்களின்       விசும்பல் ஓசை       அடங்கிப் போயிற்று, 267.கவிதை ஒன்றை        எழுதத் தொடங்கினால்      சொற்கள்      ஒத்துழைக்காமல்     அடம் பிடித்துக்     கொண்டிருக்கின்றன 268,தாயை விட்டு         பூவை பறிக்கையில்         பிரிவு எண்ணி         சொட்டு தண்ணீர்        செடியில். 269.சீந்துவாரின்றி         தெருவோரத்தில்        கிடக்கிறது சற்றே நாற்றத்துடன்        நுனியிலையாய்        நேற்று போற்றப்பட்ட         வாழையிலை. 270, இன்று         மனம் புரவியாய் ஓட  ...

53.உலா வருவோம்

 261. ஓடு மீன் ஓட           உறு மீன் வர          காத்திருந்தது கொக்கு           பார்வை இல்லை          என்பதை மறந்து         பூனையோ தன் கண் மூடி         உலகமே இருள் என்றது. 262. என்னைச்சுற்றி         ஆதரவு யாருமில்லை          ஏனெனில்          நான் போலியில்லை. 263. ரசிக்கத்தெரியா என்னை          ரசிக்கும்படி         கவிதை எழுதச் சொன்னால்        என் செய்வேன்        எண்ணுகையில்       நான் இருக்க பயமேன்      நலமுடன் சொன்னது     அன்னைத்தமிழ். 264. சில நண்பர்களை          நாட்கணக்கில்         மாதக்கணக்கில்        வருடக் கணக்கில்        ...

39. உலா வருவோம்

 191. சவ்வுக்கால் பரப்பி          துள்ளிக்கொண்டிருக்கிறது          எனக்கு எல்லாம்          தெரியுமென         கிணற்றுத்தவளை. 192. எழுத்தாளர்களுக்கு         ஓய்வு ஏது        கனவுகளிலும்        எழுதிக்கொண்டுதான்        இருக்கிறார்கள். 193. பேசாத நாக்கு           பெரும் பாக்கியம்           பெற்றது. 194.நினைவில் வாழும்         தந்தைக்கு        இன்று பிறந்த நாள்     அவர் கொண்டாடதை   கொண்டடிக் கொண்டிருக்கிறேன் நான் 195. கண்ணீர் துளியை         கையால் துடைக்காதே         பதிலால் துடை. 

35.உலா வருவோம்

 171. நிலத்தின் விருப்பத்தைக்          கேட்டு          கரு மேகங்கள்         மழையினைப்        பொழிவதில்லை, 172. சரியானதை        சரியான  நேரத்தில்        சரியாகச்செய்தால்        பறித்திடலாம்       வெற்றிக்கனியை. 173. மனம் என்பது ஒரு           நிலைக்கண்ணாடி          மாசின்றி வைத்துக்கொள்வதும்         தூசு படியாமல்          பார்த்துக்கொள்வதும்          நம் செயல்களே, 174.அறை முழுவதும்         வெளிச்சம் தரும்         மெழுகுவர்த்தியால்         தன் நிழலுக்கு         வெளிச்சம் தர முடிவதில்லை, 175. கடல் நீரை         குடி நீராக்கி         மேகப்பைகளில்          ...

33. உலா வருவோம்

 161. எங்கு எங்கு என்றும்          இங்கு இங்கு என்றும்          தேடலிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது          தினமும் வாழ்நாள்          நமக்கு, 162. மனம்          அமைதியாய் இருக்கிறது         கடலின்         ஆழமான பகுதியில்         அலைகள் இருப்பதில்லை, 163.மலர் நீ என்றேன்         வாடிடுவேனா என்றாள்        நிலவு நீ என்றேன்        களங்கத்துடன் சேர்ந்து         வளருபவளா என்றாள்        வம்பே வேண்டாமென        தமிழ் நீ என்றிட்டேன்        முகம் மலர்ச்சியைக்       காட்டியது, 164. மலையின் உச்சியில் நின்றால்          மலையும் உன்னைவிட          உயரம் குறைவு தான். 165. நா காக்காமல்    ...

52. உலா வருவோம்

 256. பயணித்தேன்          உற்றார் உறவு        நண்பர்கள்       நம்பிக்கைத் துரோகிகள்       ஏதுமறியாதோர்        என       யார் யருடனோ       அவரவர் வழியில்       அவரவர் இறங்க      தனியனாய்      இறுதியில்      நான், 257. மழை பெய்திடின்         வெயிலுக்கு         ஏங்குகிறது        வெயில்        அதிகரிக்கையில்        மழையை வேண்டுகிறது       மனம் ஒரு       குரங்கு தான். 258. விடியலில்         விரைவாக        வரிசை கலையாது        எறும்புகள்      எங்கே போகின்றன, 259. கல்விக்கடவுளான         சரஸ்வதியை         அல்லும் பகலும்     ...

51. உலா வருவோம்

 251.விட்டுக்கொடுத்தல்         என்றால் என்ன       என்றிட்டான்       நீயே எழுதிக்கொள்      என்றேன். 252, முன்னேற          ஆசைப்பட்டாலும்         தொழில் நுட்ப அறிவு         பின்னுக்கு         தள்ளுகிறது, 253. உண்ணும் அரிசியில்          உன் பெயர்         எழுதி இருக்கும்         அப்பா சொன்னார்        எறும்பு இழுத்துச்        செல்லும் அரிசியில்         அதன் பெயர்         இருக்குமா?        நான் கேட்கவில்லை. 254. கடினமான        பாறைகளும்        உளியின் வலி        பொறுத்தால்        தெய்வமாகலாம் 255. மரியாதை என்பது         தகுதியாளருக்கு  ...