58.உலா வருவோம்
286.விருப்பம் இருந்தால்
வாழபல வழிகள்
உழைக்க மறுக்க
ஆயிரம் காரணங்கள்
இதுவே மனித மனம்.
287. முன் வைத்த
கால் அறியும் - அடுத்து
பின் வைத்த
கால் முந்துமென.
288.வாசலில்
செம்மண் பூசிய கோலம்
சுற்றி அழகாக
எல்லை போல
கொன்றைப்பூக்கள்
உதிர்ந்திருந்தன.
289. தூக்கி எறியப்பட்டதும்
சிறகு விரித்து
பறக்கத் தொடங்கினேன்.
290. ஜெயித்துக் கொண்டேயிருப்பேன்
மமதையில் சொன்னான்
பின்னால்
தோல்வி சிரித்துக் கொ௶இருந்தது,
Comments
Post a Comment