59. உலா வருவோம்

 291.. வெளிச்சத்தில் 

          உள்ளவரையே- நீ

         மதிக்கப்படுவாய் 

         இருளில் இருக்க வேண்டின் 

        உன் நிழலும் உன்னை 

       அணுகாது.

292. கணிமூடித்தனமான

        அன்பு அவனிடம் 

       அவனோ அவன் 

       கண்மூட காத்திருந்தான்.


293.சிறகடிக்கும் பறவையை

      பார்த்திட பரவசம்தான்

     நம் மீது எச்சமிடாத 

    வரையில்.

294.பூக்களுக்கும் உண்டோ

       கர்மவினை 

      ஒரே செடியில் மலர்ந்தவை 

     ஒன்று இறைவன் காலடியில்

    ஒன்று மங்கையின் கூந்தலில்

   ஒன்று அமரர் ஊர்தியில் செல்பவருடன் 

  ஒன்று தாயை பிரியாமல்.

295, சிரித்து பேசினால் 

       சிறந்தவன் என்கிறது

       சமுதாயம் .

      ஆயின் 

      சிரித்து பேசினாள்

     ஒரு மாதிரி என 

   ஓரம் கட்டுகிறது 

  ஓர வஞ்சனை சமுதாயம்,

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

10. உலா வருவோம்

14.உலா வருவோம்