60. உலா வருவோம்

 296. காணும் பொங்கலாம் 

         எதைக்காண யாரைக்காண

        என்றிட்டால் 

       உறவுகளைக் காணவாம்,

      இப்போதெல்லாம் 

     உறவேது,,,,நட்பேது 

    காணும் பொங்கல் 

   கடற்கரையிலும் 

  திரையரங்குகளிலுமே 

 கழிந்து கொண்டிருக்கிறது.


297.சிலரை நினைத்தால் 

      சிரிப்பு வருகிறது 

     ஒரு வேளை 

     என்னை நினைத்தால் 

    அவர்களுக்கு 

   சிரிப்பு வரக்கூடும்,


298. உனக்காகவே பூத்திருக்கிறேன் 

       மலர்கள் சொல்வதில்லை

      மனங்கள் சொல்கின்றன,


299. கூறுபவற்றை 

        கேட்டுக் கொண்டிருக்கிறோம்

        முடிவு நம்  கையில்தான் 

        சக்தி நாம் 

        சிவனே என்றிருக்கிறோம் 

       நமக்கான காலத்தை

       எதிர்நோக்கி.


300, வெள்ளைத்தாளின் நடுவே

        பெரியதாய் தெரிகிறது 

       சின்னக் கரும்புள்ளி.

Comments

Popular posts from this blog

69.உலா வருவோம்

68. உலா வருவோம்

70, உலா வருவோம்