29. உலா வருவோம்
141. வாழ்க்கை வாழ்வதற்கே
என்றவனிடம்
எது வாழும் வழி என்றால்
வாழ்ந்து பார் தெரியும்
என்றான்.
142. நான்
திமிரானவனாய்
தெரியலாம்
உங்கள் கண்களுக்கு
மாற வேண்டியது
நானல்ல
உங்கள் கண்ணோட்டமே.
143. 6. வெடித்து சிதறின
வெடிகளின் ஓசை
அதில்
அதை தயாரித்த
குட்டிக் கரங்களின்
விசும்பல் ஓசை
அடங்கிப் போயிற்று.
144. பிஞ்சுக் கைகளில்
பிடிக்கு அடங்கா மூங்கில்
பஞ்சு பாதங்களை
பதம் பார்க்கும் கயிறு
கழை கூத்தாடி சிறுமி.
145. விடியலின்
பனித்துளிகள்
போதையில்
மலர்கள்
Comments
Post a Comment