41.உலா வருவோம்

201.

சீந்துவாரின்றி 

       தெருவோரத்தில்

       கிடக்கிறது சற்றே நாற்றத்துடன் 

      நுனியிலையாய் 

      நேற்று போற்றப்பட்ட 

       வாழையிலை.

202. தீபாக்களும்

        கனகாக்களும்

        ஸ்னேகாக்களும் 

        நாளும் 

        அலைபேசியில்

        அந்த கடன் வேண்டுமா

        இந்த கடன் வேண்டுமா

        என தொல்லை 

        கொடுக்கின்றனர்.


203. கொய்யாப்பழம் என

        கொய்த பழத்தை

        சொல்கிறார்கள்.


204. மழை பிரமிப்புதான் 

        முதல் மழை என்று பார்த்தேன் 

        நினைவில் இல்லை

        பார்க்கும் மழை எல்லாம் 

        முதல் மழை தான் எனக்கு,


205. முகம் பார்க்கும் கண்ணாடியை

         கண்டுபிடித்தவன் 

         அகம் பார்க்கும் 

         ஆடியை கண்டுபிடிக்க

        மறந்தது ஏன்?

Comments

Popular posts from this blog

69.உலா வருவோம்

68. உலா வருவோம்

70, உலா வருவோம்