72. உலா வருவோம்
356. உள்ளத்தில்
உள்ளதை
உள்ளபடி சொன்னால்
உடுக்கை இழந்தாலும்
உதறிடும்
உறவும் நட்பும்,
357. வற்றாத
ஜீவநதியாய்
உழைப்பாளிகளின்
வியர்வை.
358.ஊர் எலையில்
அரசமரம்
சுற்றி மேடை அமைத்த மரம்,
வெயிலுக்கு நிழல்
பஞ்சாயத்து பல செய்ய
இடம் அளித்த மரம்
வெட்டப்பட்டபோது
பஞ்சாயது செய்ய யாருமின்றி
அழுத மரம்.
359, நீ இருக்கும்போது தான்
மக்களுக்கு
என் அருமை
தெரி கிறது
வருணனிடம் சொன்னார்
பரிதி (சூரியன் )
360. மகனுக்கு
பழ மரம் நட்டார் அப்பா
தோப்பை அழித்து மகனை
தொலை தேசம் அனுப்பிட
தனி மர தோப்பாய்
இவன் இன்று.
Comments
Post a Comment