73.உலா வருவோம்

 361.. தினம் 

 தேய்ந்து கொண்டே இருக்கிறேனே

  தனிமையில் நொந்த நிலவு 

  விழிகளை மூடிக்கொண்டது 

  இருள் எங்குமே இருள்

 விழி திறந்து நோக்க 

 வளர்ந்து கொண்டிருந்ததது


362.மாற்றம் மட்டுமே 

       மாறாதது என்பவன் 

       மறந்து விட்டான் 

       வாழ்க்கை முறையே

       மாறிக்கொண்டிருக்கிறது 

       என்பதை  மறந்து.


363.நினைவு 

       காக்கைகளால் 

       கொத்தப்பட்டு 

        ரணமானது 

        மனப்புண்

364. லஞ்சம் வாங்குவது குற்றம் 

        நுழைவாயிலில் கதவில் வாசகங்கள்

       அதற்கும் சற்று கீழே

      "தள்ளு" என்றிருந்தது

        குடி மகனுக்கு வந்தது 

        குழப்பம்.


365. அழகற்ற மனதை விட 

        அழகற்ற முகம் 

        அழகு,

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

68. உலா வருவோம்

69.உலா வருவோம்