74. உலா வருவோம்

 366.  விழா முடிந்து

          விடை பெறுகையில் 

          சாப்பிட்டீர்களா என்றவரிடம் 

           சாப்பிட்டாச்சு என்றவன் 

           சாப்பிட்டீர்களா என 

          என கேட்க மறந்ததேன்.


367. விட்டுக்கொடுப்பதும் 

         மன்னிப்பதும் தான் வாழ்க்கை 

         ஆனால் 

          வாழ்க்கையின் போராட்டமே

          யார் விட்டுக்கொடுப்பது 

          யார் மன்னிப்பது என்பதுதான்,


368.இலக்கியவானில் 

        காற்றில் மிதக்கும் 

        வெண் மேகமாவது 

        இருந்துவிட்டுப் போகிறேன்.

369. என்னைப் பற்றி 

        எனக்கே தெரியா நிலையில் 

         உங்களுக்கு மட்டும் 

        என்ன தெரிந்துவிடும்.


370, வானவில் அழகி 

         என்றிட்டான் 

         மழை ஓய்ந்து 

         வானவில் காணாமல் போயிற்று,

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

68. உலா வருவோம்

69.உலா வருவோம்