75. உலாவருவோம்
371. விளையும் பயிர்கள்
வரப்புகளைத் தாண்டுவதில்லை .
372. முன்னேறு முன்னேறு
அன்று
அப்பா சொன்னதை கேட்காதவன்
இன்று
பேரூந்து நடத்துநர்
சொல்ல முன்னேறுகிறான்.
373.என்னைச் சுற்றி
இன்று எவருமில்லை
நான் போலியில்லை
என்பதே காரணம்.
374, அறுவடைக்கு தயாரான
நெற்கதிர்கள்
ஒன்றுக்கொண்று
முத்தமிட்டுக்கொண்டிருக்கின்றன.
வயக்காட்டில்
விரைவில்
பிரியப்போவதை .எண்ணி.
375.நீரூற்று நதியுடன் கலப்பதும்
நதிகள் கடலுடன் கலப்பதும்
எதுவும் தனியில்லை என உணர்த்திடவே
ஒன்றுடன் ஒன்று கலப்பதே
இயற்கை விதி என உணர்.
Comments
Post a Comment