77. உலா வருவோம்

 381.தண்ணீரில் 

         தன் காதலியுடன் 

         நீந்தும் மீன்

         கரையில் இருந்த 

         கன்னியின் 

         கயல்விழி பார்த்து 

         உன்னைபோன்ற 

        நயனம் கொண்ட 

        நங்கையை பார் என்றது.


382. வெற்றுத்தாளில் 

        பேனா முனையின் உரசலால் 

        பிறந்து கொண்டிருக்கின்றன

        கவிதைகள் 

        கணக்கின்றி.


383. காழ்ப்புணர்ச்சியால் 

         காயப்பட்டிருந்தால் 

         வெளிக்காட்டிடாதே

         எதிரிகள்

         நினைத்ததை 

         சாதித்துவிட்டோம் என்று 

        மகிழ்வர்.

384,  அன்னையே தெய்வம் 

          கருவறையில் அவள் 

          இல்லையாயினும் 

          கருவில் நம்மை 

         சுமக்கிறாள்.

385,அமெரிக்காவில் மகன் 

       ஆஸ்திரேலியாவில் மகள் 

       தள்ளாத வயதில் வாழ்க்கையைத் 

       தள்ளிக்கொண்டிருக்கும் பெற்றோர்

      தாய்நாட்டில்.

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

68. உலா வருவோம்

69.உலா வருவோம்