79. உலா வருவோம்
391. இலக்கு இன்றி போனாலும்
இலக்கு ஒன்றை எட்டுவதே
இலக்கு எனக்கு,
392. உடல் ஓய்வு வேண்டுகிறது
மனமோ
நேரத்தை வீணாக்காதே
என்கிறது.
392, கிடைத்ததைக் கொண்டு
மகிழ்ச்சியடை
எது உனக்கு கிடைத்ததோ
அதன் மதிப்பை
அறியாய் இன்று நீ....
அதை இழந்த பின்னரே
உணர்வாய் நாளை.
393. ஒவ்வொரு கல்லாய் பார்த்து
கட்டின இல்லத்தின்
வரவேற்பறையில் படுத்து இருக்கிறான்
வீட்டில்
அதிக நேரம் கூடாது
எடுத்து விடுங்கள்
என்ற குரல் கேட்டு
வீடு மட்டுமே அழுகிறது,
394.கடன் கேட்டிருந்தேன்
காலை வரச்சொன்னான்
பிச்ச எடுத்தவனை
மாலை வரச்சொன்னேன்.
395. மிகுதியாய் வளைத்தால்
வில் முறிந்துவிடும்
வளையாமலேயே
நீ இருந்தால்
சமுதாயம் முறித்துவிடும்,
Comments
Post a Comment